Lenova உலகின் மிக பெரிய மடிக்கணினி உற்பத்தி செய்யும் நிருவனம் ஆகும். கடந்த வருடம் மட்டும் $38.70 பில்லின் அளவிற்கு மடிக்கணினியை விற்றுள்ளது. ஆனால் Lenovaவாலேயே தவறுதலாக (!) சிறந்த மீன் (superfish)எனப்படும் தீங்குநிரல் (malware) [சதாரணமாக வைரஸ் என்று கூறுவோம். ஆனால் வைரஸ் மற்றும் malware இடையே பல வேற்றுமை உண்டு] இன்ஸ்டால் செய்துள்ளது. ஆகவே உங்கள் மடிக்கணினி தீயவர்களால் எளிதில் தாக்கப்படலாம். இதன் செர்டிபிகட் காரணமாக, இது நாள் வரை ஆண்டி வைரஸ் மென்பொருளால் கண்டு பிடிக்க இயலவில்லை. சிறந்த மீன் (superfish) எனப்படும் இந்த தீங்குநிரல்,இது நாள் வரை காணும் தேடு பொறியாவே அறியப்பட்டது. ஆனால், இந்த மென்பொருள் https எனப்படும் பாதுகாப்பான இனைய தள சான்றிதலை தானகவே தவறான தளத்திற்கு கொடுக்கிறது. இதனால் உங்கள் ஆன்லைன் தகவல் மற்றும் பண பரிமாற்றம் ஆபத்தில் உள்ளது. இதனை எப்படி நீக்குவது என்பதை இப்போது பார்போம். உங்கள் கணினி பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, Programs and features செல்லவும். Control panel --> Programs and features அதில் பின்வரும் மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதா என பார்க்கவும். இல்லை என்றால் சிக்கல் இல்லை. Superfish Inc. VisualDiscovery இதனை முழுவதுமாக uninstall செய்யவும். இதோடு பிரச்சனை முடியவில்லை பின் Https செர்டிபிகேட்டை நீக்க வேண்டும். அதற்கு முன் இந்த பிரச்சனை உள்ளதா என்பதை அறிய பின் வரும் இணையபக்கதிற்கு செல்லவும் https://filippo.io/Badfish/ இங்கு yes என வந்தால் உங்கள் கணினி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய, Run பாக்ஸ்சை திறக்கவும் அதில், certmgr.msc என டைப் செய்யவும். பின்பு, Trusted Root Certification Authorities திறக்கவும் அதில் Certificates கிளிக் செய்யவும். இப்போது, வலபக்கத்தில், Superfish, Inc delete செய்யவும். மீண்டும் ஒரு முறை https://filippo.io/Badfish/ தளத்திர்கு சென்று செக் செய்யவும்.
புதிய செய்தி: lenova இதனை நீக்க ஒரு toolலை வெளியிட்டுள்ளது. அதனை டவுன்லோடு செய்ய, http://support.lenovo.com/us/en/product_security/superfish_uninstall இருந்தாலும் ஒருமுறை மேலே சொன்ன செயல்முறையில் செக் செய்க.
0 Comments
Leave a Reply. |
About meI am Mohamed Usman, completed my B.Tech in Civil Engineering and M.E degree in Environmental Engineering. I am a Gadget/ Android/ Windows/ Science / Technology Enthusiast. That`s make me to start these site. Daily Deals
Archives
June 2021
Categories
All
|